News April 19, 2025

விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

image

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 24, 2026

தி.மலை: செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

image

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ந.மோட்டூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து 25 முதல் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.

News January 23, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

தி.மலை: புதிய பிஸ்னஸ் தொடங்க ஆசையா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைபபடுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>இந்த இணையதளம் <<>>மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!