News April 4, 2024

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் மரணம்

image

குச்சனூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் டூவீலரில் சங்கராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி திடீரென கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News February 14, 2026

தேனி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா.?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, தேனி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 14, 2026

கணவர் கொடுமையால் பெண் விபரீத முடிவு

image

பெரியகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நிரஞ்சனாதேவியை (30) மதுரையை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவபாலன், மனைவியின் நகைகளை விற்று செலவு செய்ததுடன் குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த நிரஞ்சனாதேவி தந்தை வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

News February 14, 2026

தேனி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

image

தேனி மக்களே..நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சாரத்தின் பயன்பாடு, அரசின் மானியம் குறித்து தெரிஞ்சிக்கனுமா? இனி கவலை வேண்டாம். மின் சேவைகளை எளிமைப்படுத்த மின்வாரியம் TNEB என்ற APP-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஒருமுறை லாக்இன் செய்யவும். அதில் மின் கட்டணம், மின்சாரம் துண்டிப்பு, மின் திருட்டு, மின்மோட்டார் பழுது போன்றவை குறித்து புகார் தெரிவிக்கலாம். SHARE IT

error: Content is protected !!