News April 19, 2025

வாரண்டி தொடர்பான வழக்கில் நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

image

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் டிவி வாரண்டி தொடர்பாக 23.07.2024 அன்று தொடர்ந்த வழக்கில், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு புதிய டிவி (அ) டிவியின் விலையான ரூ.1,49,099 பணத்தை வழங்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 30, 2025

மதுபான கடைகளை மூட உத்தரவு

image

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை fl1/fl2/fl3/fl3A/fl3AA மற்றும் fl11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மது கூடங்கள் வியாழக்கிழமை மே தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் மதுக்கடைகள் மற்றும் மது கூடங்கள் 01.05.2025 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

News April 29, 2025

மன்னார்குடி பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

image

மன்னார்குடியை சேர்ந்த லெனின் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று விடுதலை செய்யப்பட்ட அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

News April 29, 2025

திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு

image

திருவாரூர் மாவட்டத்தின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா? திருவாரூர் மாவட்டம் கடந்த 1997-இல் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து பிரித்து கலைஞரால் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டது. 9 தாலுகா, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 573 வருவாய் கிராமங்கள் என பரந்து விரிந்த நிர்வாக அமைப்பை திருவாரூர் மாவட்டம் கொண்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்யவும் !

error: Content is protected !!