News April 19, 2025
AC புறநகர் ரயில் சேவை தொடங்கியது

சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News August 8, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.8) திருவொற்றியூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 8, 2025
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிக்க பரிசீலனை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இன்று (ஆக.07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.
News August 7, 2025
JUST IN: சென்னையில் IT ஊழியர் விபரீத முடிவு

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.