News April 4, 2024
5 நாட்கள் பட்டினி இருந்ததாக நாராயணமூர்த்தி பரபரப்பு

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி 5 நாட்கள் பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார். ஐநாவில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்தபோது, பிறரிடம் லிப்ட் கேட்டு கார்களில் பயணித்ததாக தெரிவித்தார். மேலும் பல்கேரியா-செர்பியா இடையேயான நிஷ் பகுதியில் பயணித்த போது 5 நாள்கள் பட்டினி இருந்ததாகவும் நாராயணமூர்த்தி கூறினார்.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்

<<18842248>>இலங்கை கடற்படை<<>> சிறைப்பிடித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.


