News April 19, 2025
விரைவில் அமைச்சரவையில் மாற்றமா?

உளவுத்துறை ரிப்போர்ட்டை தொடர்ந்து அமைச்சர் <<16144954>>பொன்முடியை <<>>நேரில் அழைத்து கடிந்துக்கொண்ட ஸ்டாலின், நடவடிக்கைக்கு கட்டுப்படுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம் என பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் வரவுள்ளதால் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், திமுகவின் பேச்சாளர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.
Similar News
News February 3, 2026
டிரம்பிடம் சரணடைந்த மோடி: காங்கிரஸ்

இந்தியா தொடர்பான அனைத்து முடிவுகளும் வாஷிங்டனிலேயே(டிரம்ப்) எடுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர், வெனிசுலாவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியா – US வணிக விவகாரம் என எல்லா முடிவுகளின் அறிவிப்பையும் டிரம்ப் மட்டுமே வெளியிடுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். PM மோடி அவரிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News February 3, 2026
திமுகவுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை?

அதிமுகவில் OPS-ஐ இணைக்கமாட்டேன் என EPS திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து திமுகவுடன் OPS ஆலோசித்ததாகவும், சாதகமான பதில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படியாவது அதிமுகவில் இணைந்தால் மட்டுமே தனக்கும், வாரிசுகளுக்கும் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்துள்ள OPS, அக்கட்சியில் அவைத்தலைவர் பதவிகேட்டு பாஜக தலைவர்கள் மூலம் தூது அனுப்பி அமைதி காக்கிறாராம். OPS-ன் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?
News February 3, 2026
4 நாள்களில் வெள்ளி விலை ₹1.25 லட்சம் குறைந்தது

<<19027688>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி நகைகளின் விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹1.25 லட்சம் சரிந்துள்ளது. இதன்படி, சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதே சந்தை நிலவரம் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதால், இன்றும் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


