News April 18, 2025
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் OPS

தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
Similar News
News December 19, 2025
தமிழ் நடிகை மரணம்.. அதிர்ச்சித் தகவல்

சீரியல் நடிகை ராஜேஸ்வரியின் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக ராஜேஸ்வரி ஏற்பாடு செய்து வைத்திருந்த ₹13 லட்சத்தை அவரது கணவர் சதீஷ் செலவளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற ராஜேஸ்வரி, 40-க்கும் மேற்பட்ட BP மாத்திரை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார். கணவர் சதீஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
News December 19, 2025
செங்கோட்டையன் அதிரடி.. EPS அதிர்ச்சி

அடுத்தடுத்து கொங்கு மண்டலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். இதன்படி, டிச.30-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஈரோட்டில் பரப்புரை செய்து கொங்கு பகுதியில் விஜய்க்கான ஆதரவை காண்பித்தார் செங்கோட்டையன். இந்நிலையில், EPS-ன் சொந்த மாவட்டமான சேலத்தில் விஜய்யை களமிறக்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்க KAS தயாராகி வருகிறாராம்.
News December 19, 2025
ரேஷன் கார்டுகளுக்கு KYC அப்டேட்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>KYC அப்டேட்<<>> செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


