News April 18, 2025
FACT CHECK: UPI-க்கு GST?

₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.
Similar News
News October 26, 2025
எந்த மூலிகையை வீட்டில் வளர்ப்பது முக்கியம்? இதோ…

பெரும்பான்மையான வீடுகளில் பசுமைக்காகவும், அழகுக்காகவும் செடி, கொடிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் இன்று இருக்கும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது மழைக்காலம் வேறு வந்துவிட்டது. எனவே வீடுகளில் மூலிகைகளை வளர்ப்பது மிக முக்கியம். அவை என்னென்ன என்பதை மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 26, 2025
BREAKING: விலை கிடுகிடு உயர்வு

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹4 உயர்ந்து ₹101-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹110-க்கும், ஒரு முட்டை ₹5.25-க்கும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் சிக்கன் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் சென்னையில் கிலோ ₹200 – ₹230 வரையில் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?
News October 26, 2025
மெஸ்ஸியின் இந்தியா பயணம் ரத்து.. ஷாக்கில் ரசிகர்கள்!

மெஸ்ஸியின் இந்திய வருகையும், கேரளாவில் அவர் விளையாடவிருந்த போட்டியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA-விடம் கேரள போட்டிக்கு அனுமதி பெற தாமதமானதால் அப்போட்டி அடுத்த சர்வதேச அட்டவணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


