News April 18, 2025
காேயில் பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்

தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.
Similar News
News December 29, 2025
விரைவில் சென்னைக்கு வருகிறது IKEA

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம் தான் IKEA. ஏற்கெனவே இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இதன் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் சென்னையில் தன்னுடைய கடையை திறக்க முடிவு செய்துள்ளது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என சென்னை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், IKEA-வின் வருகை ஃபர்னிச்சர் துறையில் மிகப்பெரிய சர்வதேச முதலீடாக அமையும்.
News December 29, 2025
சீரியல் நடிகைகள் தற்கொலை.. தொடரும் சோகம்

சீரியல் நடிகைகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், நடிகை ராஜேஷ்வரி உயிரிழந்த நிலையில், இன்று <<18703577>>மேலும் ஒரு சீரியல் நடிகை<<>> தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், இதற்குமுன் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகைகளின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 29, 2025
பிரவீன் சக்ரவர்த்திக்கு எதிராக தலைமையிடம் புகார்: SP

காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவின் குரலாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என <<18699142>>பிரவீன் சக்ரவர்த்தியை<<>> குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார். கடன் விவகாரத்தில் உ.பி., vs தமிழ்நாடு என எப்படி ஒப்பிட முடியும்? 4.6% கடனில் தமிழகத்தை விட்டுச்சென்றது அதிமுக. ஆனால் அது தற்போது 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. <<18700197>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> குறித்து தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.


