News April 18, 2025

செங்கல்பட்டு: வீட்டில் தங்கம் சேர செல்ல வேண்டிய கோவில்

image

செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News July 5, 2025

செங்கல்பட்டில் இன்னைக்கு எங்கு எல்லாம் கரண்ட் கட்?

image

மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி அருங்குணம், பூதூர், கே.கே.புதுர், கீழரமூர், ஓரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஒட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம், வேடந்தாங்கல், அண்டவாக்கம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.ஷேர் பண்ணுங்க!

News July 5, 2025

இந்து சமயம் அறநிலை சார்பில் மூன்று திருமணம்

image

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கா.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இன்று (ஜூலை.4) திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் அனைவரும் எம்.எல்.ஏ மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகளைப் பெற்றனர். இத்திருமணம் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

News July 4, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜூலை 04) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!

error: Content is protected !!