News April 18, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள்

கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் ரூ.23 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். காக்களூர், தாமரைக்குளத்தில் ரூ.2 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும். பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும். திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தபடும் என CM தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிரவும்*
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், திருவள்ளூரில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 29, 2025
திருவள்ளூர் பெண், பெண் வீட்டார் கவனத்திற்கு

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-9498147528, கும்மிடிபூண்டி-9498147510, பொன்னேரி-9498146658, , ஊத்தூக்கோட்டை-9498147775, திருத்தணி- 9498147530. *உங்கள் வீட்டு&தெரிந்த பெண்களுக்கு பகிர்ந்து சேவ் பண்ண சொல்லவும். கண்டிப்பாக உதவவும்.*