News April 18, 2025
கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க சிறப்புக்குழு

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மோதலில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
திமுகவில் இணைந்த தவெகவினர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தவெகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ளதாக திமுக MLA நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ நிர்ணயித்த இலக்கை விட 58 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாக திமுகவில் இணைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
News September 16, 2025
₹100 கோடிக்கு தள்ளாடும் ‘மதராஸி’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ படம், இதுவரை ₹91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸான 2 நாளிலேயே ₹50 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 10 நாள்கள் கடந்தும் இன்னும் ₹100 கோடியை தொட முடியாமல் தள்ளாடி வருவதாக கூறப்படுகிறது. ₹150 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதாக கூறப்படும் நிலையில், தியேட்டர் ரிலீஸ் பெரிதாக லாபத்தை கொடுக்காது என்கின்றனர்.
News September 16, 2025
மைக்ரோவேவ் பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

குறைந்த கலோரி கொண்ட பார்ப்கார்னில் நார்சத்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதனால் கேன்சர் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, பாப்கார்ன் பைகளில் உள்ள PFCs என்ற ரசாயனங்களோடு அதை மைக்ரோவேவ்வில் வைப்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. ஆனால் இவை தற்போது அகற்றப்பட்டுள்ளன என்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். SHARE.