News April 18, 2025

சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Similar News

News December 7, 2025

விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Sales Coordinator பிரிவில் 60 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 – 35 வயதிற்குட்பட்ட 1-2 வருடன் அனுபவமுள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News December 7, 2025

விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

image

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

error: Content is protected !!