News April 18, 2025
அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.
Similar News
News October 29, 2025
BREAKING: கரையை கடந்தது மொன்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே நள்ளிரவு 12:30 மணியளவில் கரையை கடந்ததாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 1-2 மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதனிடையே, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
News October 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 29, ஐப்பசி 12 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News October 29, 2025
INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.


