News April 18, 2025
சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மே 19ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News October 13, 2025
ரவுடிகளின் பட்டியல் சேகரிக்கும் காவல்துறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இறந்த ரவுடி நாகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் எத்தனை பேர், அவர்கள் யார் யார் என்ற பட்டியலைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பட்டியலை வைத்து விரைவில் அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
News October 13, 2025
கிண்டி அருகே காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரி (18). இவர் கிண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ்வரிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட காய்ச்சலால் அவதிபட்டிருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 13, 2025
சென்னை மக்களே பண மோசடியா? கவலை வேண்டாம்

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்