News April 18, 2025

ரேஷன் புகார்களுக்கு சிறப்பு எண்

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, தங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04362-231336, 9445000286 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News January 18, 2026

தஞ்சாவூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 18, 2026

தஞ்சாவூர்: ரயில் மோதி முதியவர் பலி

image

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 70 வயதுடைய முதியவர், திருச்சி – காரைக்கால் சரக்கு ரயில் மோதி பலியானார். அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

தஞ்சை: ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மக்களின் குறைகளை கேட்டு, அதை சரி செய்ய மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வருகிற ஜன.24 அன்று வட்டார வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், அலுவலரிடம் மனுக்கள் கொடுத்து பயன்பெறுமாறு’’ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!