News April 18, 2025

ஈரோடு: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

Similar News

News September 18, 2025

ஈரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரின் நேர்மை

image

சத்தியமங்கலத்தில் அரசு பேருந்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணத்துடன் இருந்த பையை தவற விட்ட மூதாட்டியிடம் பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் மாதேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாராட்டு. மேலும் பணம் மற்றும் நகையை பாதுகாப்பாக எடுத்து ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News September 18, 2025

ஈரோடு மக்களே முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு தபால் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறை மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் 24 தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா்
கி.கோபாலன் தெரிவித்தார்.

News September 18, 2025

ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

image

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!