News April 18, 2025

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

Similar News

News January 16, 2026

தி.மலை: கன்றுக்குட்டியை கடித்து குதறிய மர்ம விலங்கு!

image

திருவண்ணாமலை ஜவ்வாது மலையடிவாரத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான விலங்கு ஒன்று அங்குள்ள கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, எடப்பரை பெரிய மலை அடிவாரத்தில் கன்றுக்குட்டியும் இதேபோல கொல்லப்பட்டிருந்தது. இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருக்க வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News January 16, 2026

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News January 16, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4)குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5)முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7)பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!