News April 18, 2025

நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் அரசு விழாவில், 2 லட்சம் பேருக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ரூ.418 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். ரூ.390 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

Similar News

News January 12, 2026

திருவள்ளூரில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்!

image

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர் இவர் மப்பேடு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராமாசங்கரை கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ராமாசங்கர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 12, 2026

திருவள்ளூர்: ரூ.50 கட்டினால்.. ரூ.1 லட்சம் லாபம்!

image

திருவள்ளூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும்.

News January 12, 2026

JUSTIN: திருவள்ளூரில் தொடரும் வன்முறை!

image

மப்பேடு பகுதியில் இன்று(ஜன.12) அதிகாலை வடமாநில இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி, ரூ.10,000, செல்போன் திருடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்த வடமாநில இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரைத் தாக்கிச் சென்ற 6 பேரை மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!