News April 18, 2025
சமைக்கப் போறீங்களா… இதப் படிங்க முதல்ல!

விதை மற்றும் வெஜிடெபிள் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணெய்களில் இருக்கும் Linoleic acid என்ற ஒமேகா-6 Fatty acid மார்பகப் புற்றுநோயை 3 மடங்கு வரை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தானே!
Similar News
News September 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 463 ▶குறள்: ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். ▶பொருள்: பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
News September 19, 2025
சீனாவிற்கு செக் வைக்க அது எங்களுக்கு வேண்டும்: டிரம்ப்

ஆஃப்கனில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அது தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால், மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த விமானப்படை தளத்தை, ஆஃப்கனில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியதும் அமெரிக்கா விட்டுச் சென்றது.
News September 19, 2025
பிரபாஸ் VS தீபிகா ரசிகர்கள் இடையே வார்த்தை போர்

<<17750330>>‘கல்கி 2’ <<>>படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீபிகா, பிரபாஸ் ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் போர் வெடித்துள்ளது. ஷூட்டிங் நேரத்தை குறைக்க சொல்லி, கமிட்மெண்ட் இல்லாமல் இருந்தது தான் தீபிகா வெளியேற்றத்திற்கு காரணம் என பிரபாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கர்ப்பிணியாக இருந்த போது ‘கல்கி 1’-ல் நடித்த தீபிகாவின் கமிட்மெண்ட் பற்றி பேச தகுதியில்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.