News April 18, 2025

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

image

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 26, 2025

ரோஹித் படைத்த வரலாற்று சாதனை

image

ஆஸி.,க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இதன்மூலம், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓபனிங் இறங்கி இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். ரோஹித் 15,787 ரன்களுடன் முதலிடத்திலும், சேவாக் 15,758, சச்சின் 15,335 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 2007-ல் ரோஹித் அறிமுகமானாலும், 2013 முதலே ஓபனிங் இறங்கி விளையாடி வருகிறார்.

News October 26, 2025

அதிபயங்கரமான டாப்-10 பேய் படங்கள்

image

திரைப்படங்கள் பார்ப்பதில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரசனை இருக்கும். அந்த வகையில் பேய் படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படிப்பட்ட, அதிபயங்கரமான டாப்-10 பேய் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News October 26, 2025

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

செவ்வாய் பகவான் நாளை(அக்.27) தனது சொந்த ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைவதால், 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *விருச்சிகம்: வேலையில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு, பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். *மிதுனம்: கடன் உள்ளிட்ட நிதி பிரச்னைகள் தீரும். தொழில் வளர்ச்சி இருக்கும். *கன்னி: பண வரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.

error: Content is protected !!