News April 18, 2025
திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 10, 2025
திருப்பூர்: ஜிகே வாசன் குற்றச்சாட்டு!

குண்டடம் பகுதியில் இன்று வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மடத்துக்குளம் பகுதியில் காவலர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மற்றும் தாராபுரம் பகுதியில் வக்கீல் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
News August 10, 2025
தாராபுரம் பகுதிக்கு ஜி.கே வாசன் வருகை

தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரத்தினசபாபாதி, கடந்த 1 மாதத்திற்கு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பியுமான ஜி.கே வாசன், அவரது விட்டிற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகச்சில் தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News August 10, 2025
திருப்பூர்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

திருப்பூர் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, <