News April 18, 2025
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர்களான இந்திரகுமார் (21), லோகேஷ் (20) இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏப்.16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில், இருவரும் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
Similar News
News August 10, 2025
விருதுநகர் பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
News August 10, 2025
சாத்தூர்: 15 ஆண்டுகளாக சரி செய்யப்படாத சாலை

ஆக.10 சாத்தூர்: மேட்டமலை – இ.குமாரலிங்கபுரம் கிராமங்களுக்கிடையே 4 கிலோமீட்டர் தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளுக்கு அதிக தொழிலாளர்களும் பயணிக்கின்றனர். இச்சாலையில் 2.2 கிலோமீட்டர் சாத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்துக்கு உட்பட்டது. இச்சாலை கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
News August 10, 2025
விருதுநகர்: IOB வங்கியில் வேலை!

விருதுநகர் இளைஞர்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <