News April 18, 2025
கோவிலில் சிலை திருடிய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News August 10, 2025
ராணிப்பேட்டை: வீட்டு சுவர் இடிந்து ரேஷன் ஊழியர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சின்ன பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையில் அவர் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News August 10, 2025
ராணிப்பேட்டை: விடுமுறை தினத்தில் இங்க போங்க!

ராணிப்பேட்டை, அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள குடவரை கோயில் ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது கி.பி.600 – 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும்.வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். வரலாற்று இடங்களை விரும்புபவர்களுக்கு இதை ஷேர் செய்து தெரியப்படுத்தவும்.
News August 10, 2025
ராணிப்பேட்டை: இன்றே கடைசி!

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <