News April 18, 2025
துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.
Similar News
News December 26, 2025
திருப்பத்தூர்: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

திருப்பத்தூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
திருப்பத்தூர்: ராணுவர் வீட்டில் கொள்ளை முயற்சி

திருப்பத்தூர்: சிவசக்தி நகரை சேர்ந்த ராஜா (36) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம், 4 முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை CCTV மூலம் பார்த்த தீபா பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் வெளியே வந்து பார்க்க, கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
திருப்பத்தூர்: தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி!

திருப்பத்தூர் அருகே சின்ன உடையாமுத்தூரை சேர்ந்தவர் சூர்யா (24). கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அரவிந்த் (25). இருவரும் நேற்று மதியம் 2 மணியளவில் சின்ன வெப்பாளம்பட்டியில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டு இருந்தபோது, திடீரென சூர்யா மாயமானார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தவளின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சூர்யாவை சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர்.


