News April 18, 2025

வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

image

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

அருமனையில் 2 முதலைகள் நடமாட்டத்தால் பீதி

image

களியல் கோதையாறில் முதலை பீதி அகலாத நிலையில் தற்போது அருமனை அருகே கல்லுவரம்பு கோதையாறு பகுதியில் 2 முதலைகள் நடமாடியதை பார்த்து சிலர் அதனை படம் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் பாறை மீது கிடப்பதை போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரு கிறது. இதனால் அம்பலக்கடை, கொக்கஞ்சி, கோட்டக்ககம் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 13, 2026

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் டெண்டர் கோரப்பட்டுள்ளது

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!