News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Similar News
News August 8, 2025
தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருது பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2025ம் ஆண்டிற்கான “தமிழ் செம்மல்” விருதுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithuraiin..gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் 28ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
News August 8, 2025
நெல்லை வழியாக சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
இளம் வில்லுப்பாட்டு கலைஞரை கௌரவித்த கலெக்டர்

நெல்லை பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பல்வேறு கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆன்மீக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகி வருகிறார். சிறு வயது முதலே வில்லுப்பாட்டு கலையை ஆர்வமாக மேற்கொண்டு வரும் கலைஞர் மாதவியை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து கலையை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டினார்.