News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் MLA உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.
Similar News
News December 29, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 29, 2025
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்

NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு <<18692245>>தமிழிசை<<>> நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசனும் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி என்பதே பொது எதிரியை வீழ்த்தத்தான் என்ற அவர், திமுகவை சேர்ந்தே வீழ்த்தலாம் என்று விஜய்யை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News December 29, 2025
மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 4 முறை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் 2018(1,291 ரன்கள்), 2022(1,290 ரன்கள்), 2024(1,659 ரன்கள்) & 2025-ல்(1,703 ரன்கள்) அதிக ரன்களை விளாசியுள்ளார். யாரும் இச்சாதனையை 2 முறைகூட செய்ததில்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில்(2024 & 2025) அதிக ரன்களை விளாசிய ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.


