News April 18, 2025
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகாபுரம் மேல தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (53) . இவர் நேற்று உழவு பணி மேற்கொள்ள தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு வள்ளிநாயகபுரம் – கழுகுமலை சாலையில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
நாளை தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன் மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நாளை(ஆகஸ்ட்.11) பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை அரசு மற்றும் தனியார் ஐடிஐ களில் தேர்ச்சி பெற்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *ஷேர்*
News August 10, 2025
தூத்துக்குடி: IOB வங்கியில் வேலை..! Apply..

தூத்துக்குடி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <
News August 10, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-யை மறந்தால்; இதை செய்யுங்க..

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். *ஷேர் பண்ணுங்க*