News April 4, 2024

ஐபிஎல்லில் டெல்லி அணி மோசமான சாதனை

image

ஐபிஎல்லில் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை டெல்லி அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி நேற்று தோற்றது. இதுபோல 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அந்த அணி தோற்பது இது 3வது முறையாகும். இதன் மூலம் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிகமுறை தோற்ற அணி என்ற சாதனையை ஆர்சிபியுடன் பகிர்ந்தது.

Similar News

News February 19, 2026

‘விஜய்யின் வெற்றியில் அஜித்துக்கு மகிழ்ச்சி’

image

அஜித்-விஜய் நட்பு குறித்து நெகிழ்ச்சியான கருத்தை ஷாலினி பகிர்ந்துள்ளார். விருது விழா ஒன்றில் பேசிய அவர், அஜித்-விஜய் இடையில் ஆரோக்கியமான உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகவே கருதி மகிழ்வார்கள் என்றும், அது அழகானது எனவும் கூறியுள்ளார். இதன் பிறகாவது இருவரது ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பார்களா என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

News February 19, 2026

திமுகவுக்கு அதிர்ச்சி.. அதிமுகவில் இணைந்தார்…

image

மதுரை திமுகவில் முக்கிய முகங்களாக இருந்த திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்த <<19166028>>மதுரை மன்னன்<<>>, 2 நாள்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபியும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

News February 19, 2026

ஓடும் ரயிலில் மாணவியை வன்கொடுமை செய்த TTE

image

உ.பி.,யில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்சிசி தேர்வுக்காக அவசரமாக ஓடிவந்து கோரக்பூர்- அகமதாபாத் ரயிலைப் பிடித்த மாணவி, டிக்கெட் எடுக்கவில்லை. இதை அவர் TTE-யிடம் சொல்ல, உட்கார சீட் தருகிறேன் என்று அழைத்துப் போன அவர், ஏசி பெட்டியில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளார். பாதுகாப்பு தரவேண்டியவரே இப்படி செய்தால்…?

error: Content is protected !!