News April 17, 2025
சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
Similar News
News November 14, 2025
இளைஞர் விபரீத முடிவு சேலம் அருகே சோகம்!

சேலம்; உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான கூரியர் ஊழியர் பிரபாகரன், முதுகு தண்டுவட பாதிப்பால் ஏற்பட்ட தொடர் வலியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை!
News November 14, 2025
சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!
News November 14, 2025
சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!


