News April 17, 2025
EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
BREAKING: அதிமுகவில் புது டிவிஸ்ட்

மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமையிடம் பேசுவோம் என <<18251927>>Ex அமைச்சர் OS மணியன்<<>> பேசியது பேசுபொருளாகியுள்ளது. சசிகலா, TTV, OPS, செங்கோட்டையன் ஆகியோர் துரோகிகள் என EPS உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், OS மணியனின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்தா (அ) அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் எண்ணத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News November 11, 2025
ஏன் இது தொடர்கதையாகி விட்டது?

IPL அணிகள் தொடர்ந்து, தங்களுக்கு கணிசமான பங்களிப்பை அளித்த வீரர்களை கைவிட்டு விடுகின்றன. RCB கெயிலை, DC பண்டை, CSK ரெய்னாவை, RR பட்லரை, SRH வார்னரை என இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2024-ல் கோப்பையை வென்ற ஷ்ரேயஸ் ஐயரை, அதே ஆண்டில் KKR கைவிட்டது. அதன் தொடர்ச்சி தான், ஜடேஜாவை CSK கைவிட்டதாக கூறப்படும் செய்தியும். இது ஏன் தொடர்கதையாக உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. நீங்க என்ன சொல்றீங்க?
News November 11, 2025
T.R.பாலுவிடம் அண்ணாமலை இன்று குறுக்கு விசாரணை

DMK Files என்ற பெயரில் திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை அவதூறு பரப்பியதாக ₹100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு மான நஷ்ட வழக்குத் தொடுத்தார். இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்.


