News April 17, 2025
இந்துக்களும் நாமும் ஒன்றல்ல: பாக். ராணுவத் தளபதி

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மத ரீதியான சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். நமது மதம், பழக்கவழக்கம், மரபு உள்ளிட்டவை இந்துக்களிடம் இருந்து வேறுபாடானது எனவும், இதனை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அசிம் வலியுறுத்தினார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News September 16, 2025
நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 அரசு Apps

இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் வசதிக்காக பல சேவைகளை செயலிகள் வாயிலாக வழங்கிவருகிறது. அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும், முக்கியமான பணிகளை எளிதாக்குவதற்கும் இந்த செயலிகள் உதவுகிறது. அந்த வகையில் உங்கள் ஃபோனில் கட்டாயம் இருக்கவேண்டிய 6 செயலிகள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News September 16, 2025
என்னை யாரும் மிரட்ட முடியாது: EPS

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது என்று EPS தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் எனக் கூறி ஒருங்கிணைப்புக்கு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News September 16, 2025
பிரசார தொகுதிகளை குறைக்கிறாரா விஜய்?

செப்.20-ல் மயிலாடுதுறையில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்திருந்தார் விஜய். அதேபோல, வரும் சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் மயிலாடுதுறை பிரசாரத்தை ஒத்திவைத்துவிட்டு, நாகை திருவாரூரை மட்டும் கவர் செய்ய விஜய் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.