News April 17, 2025

தடையை மீறினால் நிவாரணம் நிறுத்தப்படும் – அரசு எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களில் எச்சரிக்கையை மீறி மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டால் புதுவை அரசின் மீன்வளத்துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நிறுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

புதுச்சேரி: சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி சுகாதார மிஷன், சார்பில் தேசிய குழந்தைகள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையால் காரைக்கால் அரசு மருத்துவமனையில், 0-18 வயதுடைய குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நவ.21 அன்று நடைபெற உள்ளது. முகாமில் ஏதேனும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் கண்டறியப்பட்டால், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

புதுச்சேரி: போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி, சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து எந்தவித அனுமதியும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவதாக, போக்குவரத்துத் துறைக்கு புகார் வந்துள்ளது. அனுமதியின்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது போக்குவரத்து சட்டத்தின் கீழ், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் தனது அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 5, 2025

புதுச்சேரி: பணி ஆணை வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த ஐந்து உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி சட்டபேரவை அலுவலகத்தில் இன்று வழங்கினார். இந்த ஆணையானது துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி வெளியிடப்பட்டது.

error: Content is protected !!