News April 17, 2025

பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 அங்கன்வாடி மையம் மற்றும் 5 நடுநிலைப் பள்ளிகளுக்கு (ICDS) சரியான உணவு உண்ணும் வளாகம் ,அற்று, பள்ளிஎன்ற சாண்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூலம்  வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

Similar News

News November 8, 2025

பெரம்பலுர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233153>>பாகம்-2<<>>)

News November 8, 2025

பெரம்பலுர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News November 8, 2025

பெரம்பலூரில் 1592 பேர் பங்கேற்கும் காவலர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்குரிய 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொது தேர்வு நாளை நவ.9ம் தேதி துறையூர் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், 1592 தேர்வாளர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!