News April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டபடி புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: SC

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News November 4, 2025
TN-ல் பாஜக வெல்லாததற்கு இதுவே காரணம்: தமிழிசை

ECI நேர்மையாக நடப்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்ததை போல தமிழ்நாட்டிலும் பாஜக கொண்டு வரும் எனவும், பாஜக மதவாதக் கட்சி அல்ல, மனிதவாத கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு போலியான வாக்காளர் பதிவை திமுக நடத்தி முடித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 4, 2025
சரும பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

சில உணவுகள் இயற்கையான சரும பாதுகாப்பை வழங்குகின்றன. புற ஊதா கதிர்வீச்சின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும், சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் தோல் சேதத்தையும் குறைக்க உதவுகின்றன. சரும பாதுகாப்புக்கு உதவும் உணவுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த சருமம் பாதுகாப்புக்கு உதவும் உணவுகளை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 4, 2025
மெஹுல் சோக்சியை நாடு கடத்துவதில் சிக்கல்?

நாடு கடத்தப்படுத்துவதற்கு எதிராக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த விசாரணை நடைபெறும் வரை, நாடு கடத்தப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு வக்கீல் கென் விட்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, மெஹுல் சோக்சியை நாடு கடத்த ஆன்ட்வெர்ப் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. PNB வங்கியில் ₹13,000 கோடி கடன் வாங்கிவிட்டு அவர் பெல்ஜியம் தப்பி சென்றார்.


