News April 17, 2025

ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

image

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.

Similar News

News September 19, 2025

ராம்நாடு: ஒரே இடத்தில் 2வது விபத்து.. 2 பேர் பலி!

image

சாயல்குடியில் இருந்து கமுதி, செல்லும் சாலையில் உள்ள திட்டங்குளம், அருகே மணிவலை விளக்கு, பகுதியில் (செப், 18) மீண்டும் விபத்து நிகழ்ந்து. இதில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பும் அதே இடத்தில் பைக் மீது மினி லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை இங்கு மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 19, 2025

இராமநாதபுரம் தபால் சேவை குறைதீர் கூட்டம்

image

இராமநாதபுரத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற செப்.20ம் தேதி தபால் சேவை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. தபால் அனுப்பியதில் குறைப்பாடுகள் இருந்தாலும், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் மனு கொடுத்திருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், உங்களது வேறு குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.

News September 19, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபதாரத்துடன் விடுதலை

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை.02 அன்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தும் வரை மீன்வர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!