News April 17, 2025
போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News September 18, 2025
தேனி மக்களே 8th படித்தால் கூட வேலை

தேனி வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். வேலை தரும் நிறுவனங்களை<
News September 18, 2025
தேனியில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
News September 18, 2025
தேனியில் கேரளா கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்

கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேற்று (செப்.17) சம்பந்தப்பட்ட இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.