News April 17, 2025
பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை, மானாமதுரை பகுதி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பகல் நேரத்தில் சென்னைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லாததால், பேருந்துகளில் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னையிலிருந்துகாரைக்குடி வரை தினசரி இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News August 20, 2025
சிவகங்கை பெண்களுக்கு உதவும் எண்கள்

சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .
News August 19, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News August 19, 2025
மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் ஆக.20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் மரபும் பண்பாடும் பரப்புரையாக “சிம்புட் பறவையே… சிறகை விரி!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.