News April 17, 2025
IPL 2025: வெற்றியை தொடர போவது யார்?

இன்றைய லீக் ஆட்டத்தில், MI – SRH அணிகள் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். இன்று, 2வது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. யார் ஜெயிப்பாங்க?
Similar News
News April 19, 2025
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மாணவன் கைது

ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து அந்த மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்போர் ஓடி வந்து, அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அவனை போலீஸ் கைது செய்தது.
News April 19, 2025
இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழை

21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், தி.மலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News April 19, 2025
575 பந்துகளில் 1,000 ரன்கள்.. டிராவிஸ் ஹெட் சாதனை

SRH அணி வீரர் டிராவிஸ் ஹெட், 575 பந்துகளில் 1,000 ரன்கள் விளாசி IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில், ஆன்ட்ரூ ரஸல் முதலிடத்தில் உள்ளார். அவர் 545 பந்துகளில் 1,000 ரன்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து, 2ஆவது இடத்தை டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார். கிளாசன் 594, வீரேந்திர சேவாக் 604 பந்துகளில் 1,000 ரன்கள் குவித்துள்ளனர்.