News April 17, 2025
10 நாள்களில் சவரனுக்கு ₹5,560 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை <<16125169>>இன்று<<>> கிராமுக்கு ₹105 அதிகரித்துள்ளது. கடந்த 8-ம் தேதி 1 கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையானது. கடந்த 10 நாள்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹8,920க்கும், சவரன் ₹71,360க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வரிப்போர் காரணமாக வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 25, 2025
நெல் மூட்டைகள் நகர்வில் TN புதிய சாதனை

ஒருபக்கம் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நகர்வில், TN நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வரலாற்றில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 11.5 சரக்கு ரயில்கள் நிறைய நெல் மூட்டைகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
திருமா, வைகோவுக்கு அன்புமணி முக்கிய கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என தெரிந்தும் திருமாவளவன், வைகோ ஆகியோர் ஏன் இன்னும் கேட்கவில்லை என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது கூட்டணிக்காகவா, ஓட்டுக்காகவா (அ) தேர்தலுக்காகவா என்றும் அவர் கேட்டுள்ளார். சாதியால் வந்த வேற்றுமைகளை சினிமா பார்த்து போக்கிவிட முடியுமா என்று ’பைசன்’ படத்தை திருமா பாராட்டியதையும் மறைமுகமாக குறிப்பிட்டார்.
News October 25, 2025
Fixed Deposit-க்கு அதிக வட்டி தரும் வங்கிகள்

பல்வேறு வகையான முதலீடுகளுக்கு நடுவில், Fixed Deposit (FD) மக்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் 10 ஆண்டுகள் வரை FD-ல் முதலீடு செய்யலாம்.
*Suryoday Small Finance Bank – 5 ஆண்டிற்கு 5.20%
*ஜன சிறு நிதி வங்கி – 5 ஆண்டிற்கு 8%
*ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் – 18 மாதத்திற்கு 7.75%
*பந்தன் வங்கி – 2 – 3 ஆண்டிற்கு 7.20%
*ICICI, HDFC வங்கிகள் – 5 ஆண்டிற்கு 6.60%


