News April 17, 2025
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

புதுச்சேரிக்கு உட்பட்ட மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (ஏப்.17) காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுமென்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News August 27, 2025
புதுச்சேரி: மதுக்கடைகளை மூட உத்தரவு!

புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை காந்திசாலையை அடைகிறது. இதனால் வருகிற 31ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை, புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News August 27, 2025
புதுச்சேரி: 121 கிலோ மெகா சைஸ் லட்டு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் ஸ்வீட்ஸ் என்ற கடையில் 12வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வித்தியாசமான முறையில் 121 கிலோவில் மெகா சைஸ் லட்டு செய்து விநாயகரை வழிபட்டனர். இந்த மெகா லட்டுவை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
News August 27, 2025
புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.