News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. அறிவித்தது அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, 5,322 அரசுப் பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ₹127.57 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2026- 27-க்குள் இந்த வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 6, 2025
BREAKING: ரெய்னா, தவானின் ₹11 கோடி சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதன்படி ரெய்னாவுக்கு சொந்தமான ₹6.64 கோடி மியூச்சுவல் ஃபண்ட் நிதியை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷிகர் தவானுக்கு சொந்தமான ₹4.53 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளையும் ED முடக்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் குறித்து இருவரிடமும் ED விசாரணை நடத்திய நிலையில், தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
News November 6, 2025
இந்த வார OTT விருந்து மெனு இதோ!

வரும் நவம்பர் 7-ம் தேதி, மக்களுக்கு OTT-யில் பெரிய ட்ரீட் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி, ஆங்கிலம், கொரியன் என பல மொழிப் படங்களும், வெப் சீரிஸும் ரிலீஸாக உள்ளன. அது என்னென்ன படங்கள் என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்யவும். நீங்கள் இதில் எந்த படத்தை முதலில் பாக்க போறீங்க?


