News April 4, 2024
நாமக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
Similar News
News July 5, 2025
பள்ளி, கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
நாமக்கலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நேரடி நியமனம் நடைபெறும்.
News July 5, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் இணைத்த கட்டணத் தொகையை செலுத்தலாம்.