News April 4, 2024
IPL: வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப்?

குஜராத் – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 17ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
Similar News
News January 24, 2026
நெல்லை: கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்!

ஜாய்சன், ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தியேட்டரில் படம் பார்த்த போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சமாதானபுரத்தில் வீட்டிற்கு சென்ற மாணவியை, பின் தொடர்ந்த ஜாய்சன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜாய்சனை கைது செய்தனர்.
News January 24, 2026
அதிமுக சின்னம் தொடர்பான வழக்கில் நடவடிக்கை: ECI

அதிமுக சின்னம் ஒதுக்கீடு, கட்சி பெயர், கொடி, தலைமைத்துவம் தொடர்பாக பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக ECI, டெல்லி HC-ல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவில்லை என புகழேந்தி என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ECI தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆராயப்படுவதாகவும் கூறியுள்ளது.
News January 24, 2026
5 ஆண்டுகளில் CM செய்தது என்ன? அவரே சொல்கிறார்..

தமிழ்நாடு CM ஆக தான் பொறுப்பேற்று 1,724 நாள்கள் ஆவதாக பேரவையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நாள்களில் 8,685 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறிய அவர், 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும் 44,44,721 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் தான் மக்களுக்காக வாழ்ந்ததாகவும், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்ததாகவும் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.


