News April 17, 2025
EPF பணத்தை எடுப்பது எப்படி?

ஆன்லைன்: EPFO வலைதளத்திற்குள் [www.epfindia.gov.in](https://www.epfindia.gov.in) செல்லவும். UAN மெனுவில் “Claim” → “Request for Advance” க்குச் செல்லவும். காரணத்தைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்கவும். நீங்கள், வங்கிக் கணக்கிற்கான Cheque Leaf-ஐ அப்லோட் செய்ய வேண்டியிருக்கலாம். ஆஃப்லைன்: உங்களுக்கு அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். 20 நாட்கள் வரை ஆகலாம்.
Similar News
News September 9, 2025
ஆசிய கோப்பை தொடர் பரிசுத்தொகை இவ்வளவா?

17-வது ஆசிய கோப்பை தொடர் UAE-ல் இன்று தொடங்குகிறது. துவக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் UAE உடன் நாளை மோதுகிறது. இத்தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது. கோப்பை வெல்லும் அணிக்கு ₹2.6 கோடி, Runner-up அணிக்கு ₹1.3 கோடியும் வழங்கப்படவுள்ளது. தொடரின் நாயகன் விருதாளருக்கு ₹12.5 லட்சம் பரிசுத்தொகையாக அளிக்கப்பட இருக்கிறது.
News September 9, 2025
GALLERY: ஆசிய கோப்பையும் அபார ரெக்கார்டுகளும்!

ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியுள்ள, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மாவின் மாஸ் ரெக்கார்டில் தொடங்கி, யாரும் நெருங்க முடியாத பாகிஸ்தானின் மிக மோசமான ரெகார்ட் வரை பலவற்றையும் மேலே கொடுத்துள்ளோம். அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க Swipe செய்யவும்.
News September 9, 2025
தவெகவை கண்டு பயத்தின் உச்சியில் திமுக: விஜய்

திருச்சியில் N. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவை கண்டு திமுக பயத்தின் உச்சியில் இருப்பதாக கூறிய அவர், போலீசை ஏவி தவெக செயல்பாட்டை முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தூக்கத்தை இழந்து முழு நேரமும் தவெகவை வீழ்த்துவது பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?