News April 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News January 13, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News January 12, 2026
JUST IN: இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான திருவாடனை, இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
இராம்நாடு: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE


