News April 17, 2025
போலி துனை வட்டாட்சியர் முத்திரை; ஒருவர் கைது

சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 26, 2025
கள்ளக்குறிச்சி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.த னியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிலவரம்

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ₹8,500க்கும், மக்காச்சோளம் ₹2,369க்கும், மணிலா ₹7,930க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
News August 26, 2025
கள்ளக்குறிச்சி: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க