News April 17, 2025
திருப்பூர்: விபத்தில் ஒருவர் பலி!

திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 1, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News November 1, 2025
பல்லடம் அருகே சாலை மறியலால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற கிராம சபை கூட்டத்திற்கு முறையாக பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் 100 நாட்கள் வேலையாட்களை கொண்டு கையெழுத்து பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து, அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.


