News April 17, 2025

நீலகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமவெளிப் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் 11 வயது மகளிடம், அப்பகுதியில் இருந்த முகேஷ் குமார்(23) என்ற வட மாநில தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் முகேஷ் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

Similar News

News September 13, 2025

நீலகிரி: அரசு வேலை அரிய வாய்ப்பு APPLY NOW!

image

நீலகிரி மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <>இங்கே கிளிக் <<>>செய்து மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.! SHARE பண்ணுங்க

News September 12, 2025

நீலகிரியில் பாடகர் ஹரிஹரனுடன் கலைஞர்கள் சந்திப்பு!

image

நீலகிரியில் நடந்த தனியார் அமைப்பின் நிகழ்ச்சியில் பிரபல சினிமா பாடகர் ஹரிஹரன் பங்கேற்றார். அப்போது, அவர் தனது பாடல்களை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார். நீலகிரி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஹரிஹரன் உடன் புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News September 12, 2025

ஊட்டி கடையில் 15செல்போன்கள் திருட்டு

image

உதகை நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் சேட் மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு கடையில் இரவு நேரத்தில் கூரையை பிரித்து கடைக்குள் புகுந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!